_

_

(பி. முஹாஜிரீன்)
அக்கரைப்பற்று வாங்காமம் பிரதேசத்தில் பிக்கப் ரக வாகனத்துடன் சிறிய பட்டா ரக வண்டி நேருக்கு நேர் மோதி பாரிய விபத்து. இருவர் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 இவ்விபத்தச் சம்பவம் இன்று (31) மாலை வாங்காமம் பிரதேச பிரதான வீதியில் நடைபெற்றது.

 வேகமாக வந்த பிக்கப் வாகனத்தடன் கிடுகு ஏற்றிக்கொண்டு வந்த சிறிய பட்டா ரக வண்டியுடன் நேருக்கு நேர் மோதியுள்ளது. இவ்வீதியில் பாரிய வளைவுகள் உள்ளன. அவ்வாறான வளைவு ஒன்றிலேயே இவ்விபத்தும் நிகழ்ந்துள்ளது.

 இவ்விபத்தில் பட்டா ரக வாகனத்தில் இருவர் பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இரு வாகனங்களும் பலத்த சேதங்களுக்குள்ளாகியுள்ளன. 
(பி.முஹாஜிரீன்)
பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் மீள் எழுச்சித் திட்டத்தின் கீழ் அட்டாளைச்சேனை கோணாவத்தை பிரதேச மக்களுக்கு குடி நீர்  வழங்கும் வைபவம் சனிக்கிழமை (30) அட்டாளைச்சேனை அந்நூர் மகா வித்தியாலயத்தில் நடைபெற்றது.


இந்நிகழ்வில் தொழில் மற்றும் தொழில் உறவுகள் பிரதி அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு குடிநீர் இணைப்புக்களுக்கான ஆவணங்களை வைபவரீதியாக பயனாளிகளிடம் வழங்கிவைத்தார்.


இதில் 53 குடும்பங்களுக்கு குடிநீர் இணைப்புக்களுக்கான ஆவணங்களை வழங்கிவைத்தார். இந்நிகழ்வில் பிரதியமைச்சரின் இணைப்புச் செயலாளர் ஏ.சி. றிஸாத் உட்பட உயரதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.


 
 (பி.முஹாஜிரீன்) 
கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளரின் அறிவுறுத்தலுக்கமைய தேசிய டெங்கு ஒழிப்புத் திட்டத்தின் கீழ் அக்கரைப்பற்று வலயக் கல்விப்பணிப்பாளரின் வேண்டுகோளின் பேரில் பாலமுனை அல் ஹிக்மா வித்தியாலயத்தில் மாபெரும் டெங்கு ஒழிப்பு சிரமதான நிகழ்வு இடம்பெற்றது.

அதிபர் எம்எச் அப்துல் றஹ்மான் தலைமையில் கடந்த வெள்ளி மற்றும் சனி (29,30) ஆகிய தினங்களில் நடைபெற்றது.

இச்சிரமதான நிகழ்வில் பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும், பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினரும் கலந்து கொண்டனர். பாடசாலைச் சுற்றாடல் சுத்தம் செய்யப்பட்டதுடன் டெங்கு பரவும் இடங்கள் அழித்தொழிக்கப்பட்டன.


 
(பி.முஹாஜிரீன்)
ஒலுவில் மாவட்ட வைத்தியசாலையில் நிலவும் நிருவாகச் சீர்கேடுகளை கண்டித்து இன்று (31) ஒலுவிலில் பொதுமக்கள் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஒலுவில் பிரதேசத்தில் இளைஞர் ஒருவர் மரத்தினால் விழுந்து ஆபத்தான நிலையில் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற வேளையில் அந்த நேரத்தில் வைத்தியர்கள் இல்லாமையினைக் கண்டித்து இவ்வார்ப்பாட்டம் நடைபெற்றதாக வைத்தியசாலை அபிவிருத்தி சபையினர் தெரிவித்தனர்.


ஸ்தலத்திற்கு விரைந்த அக்கரைப்;பற்றுப் பொலிசார் நிலைமையைக் கட்டுப்பாட்டுக்குக் கொண்டுவந்து இது தொடர்பாக சுமுகமான தீர்வைப் பெற்றுத் தருவதாக வாக்குறுதி அளித்ததன் பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்
 
((பி. முஹாஜிரீன்)
அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளராகப் புதிதாக கடமையேற்றுள்ள சமன் வீரசிங்க மற்றும் பணிப்பாளராகக் கடமையாற்றி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிஹால் சிறிவர்த்தன மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையேற்றுள்ள ஏ.எல். ஜெமீல் ஆகியோரை பாராட்டிக் கௌரவிக்கும் வைபவம் நேற்று சனிக்கிழமை (30) அக்கரைப்பற்று அதாஉல்லா அரங்கில் நடைபெற்றது.

 அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை விவசாய அமைப்புகளின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்ட பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தௌபீக் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில் உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் ஏ.எல்.எம். அதாஉல்லா பிரதம அதிதியாகவும் கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெவ்வை கௌரவ அதிதியாகவும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 அதிதிகளால் நினைவுச்சின்னம், பாராட்டுப் பத்திரம் என்பன வழங்கி இடமாற்றம் பெற்றுச் சென்றுள்ள நிஹால் சிறிவர்த்தன மற்றும் புதிதாக மாவட்ட நீர்ப்பாசனப் பணிப்பாளராகக் கடமையேற்றுள்ள சமன் வீரசிங்க மற்றும் அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியாகக் கடமையேற்றுள்ள ஏ.எல். ஜெமீல் ஆகியோர் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 அத்தோடு அட்டாளைச்சேனை பிரதேசத்தில் விவசாயிகளின் நலன்கருதி வள்ளக்ககுண்டு வடிச்சல் திட்டம், விவசாயப் பாதை அமைப்பு என்பனவும் அதிதிகளால் அங்குராரப்பணம் செய்து வைக்கப்பட்டன.


(ஜதுர்சயன்)
க.பொத. சாதாரண தரப் பரீட்சையில் புலமை காட்டிய 20 ஏறாவூரைச் சேர்ந்த 20 மாணவர்களுக்கு பாராட்டும் பரிசும் சான்றிதழும் வழங்கி வைத்த நிகழ்வு சனிக்கிழமை மாலை (30.08.20140 ஏறாவூர் அல் அஷ்ஹர் மகளிர் உயர் தரப்பாடசாலையில் இடம்பெற்றது.


 ஏறாவூர் 'ஷெட்'நிறுவனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்நிகழ்வில் கிழக்கு மாகாண விவசாய கால் நடை உற்பத்தி அபிவிருத்தி, கிராமியக் கைத்தொழில் அபிவிருத்தி, மீன்பிடி சுற்றுலாத்துறை அமைச்சர் நஸீர் அஹமட் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அலிஸாஹிர் மௌலானா, மட்டக்களப்பு மத்தி கல்வி வலய பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஏ.எஸ். இஸ்ஸதீன், கோட்டக் கல்வி அதிகாரி ஐ.எல். மஹ்ரூப், ஏறாவூர் நகர சபை உறுப்பினர்களான ஐ. அப்துல் வாஸித், எம்.எல். ரெபு பாசம் உள்ளிட்ட இன்னும் பலர் கலந்து கொண்டனர்.

கடந்த டிசெம்பரில் இடம்பெற்ற க.பொ.த சாதாரப் பரீட்சையில் மட்டக்களப்பு மத்தி கல்வி வலயத்தின் ஏறாவூர் கோட்டத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் 9 பாடங்களில் 'ஏ' தரச் சித்தியினையும், 13 மாணவர்கள் 8 பாடங்களில் 'ஏ' தரச் சித்தியினையும் பெற்று சிறப்புத் தேர்ச்சியடைந்திருந்தனர். இவர்களே நேற்றைய நிகழ்வில் கௌரவமும் பரிசும் பெற்றதாக 'ஷெட்' நிறுவனத்தின் தலைவர் கே. அப்துல் வாஜித் தெரிவித்தார்.
சிதம்பரம் அருகே வன்னியர் சங்கத் தலைவர் மர்மநபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டதால் பதட்டம் நிலவுகிறது. 
 
இதனால் அசம்பாவிதங்களைத் தடுக்கும் வகையில் பாதுகாப்பிற்காக இப்பகுதியில் போலீஸ் குவிக்கப் பட்டுள்ளது. 
 
சிதம்பரத்தை அடுத்த புதுச்சத்திரம் அருகே வேலங்கிப்பட்டு கிராமத்தை சேர்ந்த இளம்பரிதி (35), வன்னியர் சங்க பரங்கிப்பேட்டை ஒன்றிய தலைவர். நேற்றிரவு சுமார் 1 மணியளவில் தனது நண்பர் பழனியுடன் புதுச்சத்திரம் சென்று விட்டு தனது இருசக்கர வாகனத்தில் ஊர் திரும்பிக் கொண்டிருந்தார் இளம்பரிதி

வேலங்கிப்பட்டு கிராம எல்லையில் வந்தபோது இருளில் பதுங்கி இருந்த மர்ம கும்பல் ஒன்று மோட்டார் சைக்கிளை வழி மறித்து இளம்பரிதி மற்றும் பழனியை சரமாரியாக வெட்டியது. இதில் சம்பவ இடத்திலேயே இளம்பரிதி பரிதாபமாக உயிரிழந்தார். மயக்கிய நிலையில் கிடந்த பழனியை அந்த வழியே சென்றவர்கள் மீட்டு சிதம்பரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர்.
 
தேர்தல் சமய முன்விரோதம் காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என சந்தேகிக்கப் படுகிறது. கொலை செய்யப்பட்ட இளம்பரிதிக்கு கடந்த 9 மாதங்களுக்கு முன்னர் தான் திருமணம் நடைபெற்றது. இந்தப் படுகொலை காரணமாக அப்பகுதியில் பதட்டம் நிலவி வருகிறது. எனவே, அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க முன்னெச்சரிக்கையாக அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

(ad)
இலங்கை பாராளுமன்றத்தின் முன்னாள் பொதுச் செயலாளரும் ஒம்புட்ஸ்மனுமான 93 வயதான ஷம் விஜயசிங்க இன்று மாலை தனது இல்லத்தில் காலமானார்.

(ஜதுர்சயன்) 
'இப்பொழுது நாம் உண்ணும் உணவும், பானங்களும் சுவாசிக்கும் வளியும் குடிக்கும் நீரும் மாசுபட்டிருக்கின்றது. ஒட்டுமொத்தமாக ஒரு நச்சுச் சூழலுக்குள் நாம் வாழ்ந்து கொண்டிருக்கின்றோம். காய்கறிகளும், தானியங்களும் எனைய கிழங்குகளும் வகை உணவுகளும் இரசாயனங்களைப் பாவித்துத்தான் உற்பத்தி செய்யப்படுகின்றன.

வேறு வழியின்றி இவற்றையே நாம் சந்தைகளில் வாங்கி உண்பதால் எமது ஆரோக்கியமும் கெட்டு உடல் சிறிது சிறிதாக நஞ்சூட்டப்படுகின்றது.' இவ்வாறு ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை மாலை (29.08.2014) ஸ்ரீலங்கா முஸ்லிம் எயிட் நிறுவனத்தினால் நீடித்து நிலைக்கும் பொருளாதார அபிவிருத்தி மற்றும் உணவுப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் இலகுவில் பாதிக்கப்படக் கூடிய குடும்பங்களுக்கு விவசாயத்தை மேற்கொள்வதற்கான வாழ்வாதார உதவிகள் வழங்கி வைக்கப்பட்ட நிகழ்வில் அவர் கிராமத்தவர்கள் மத்தியில் உரையாற்றினார்.'
கேரள மாநிலம் ஆலப்புழாவில் உள்ள படகு இல்லங்களில் விபச்சாரம் நடைபெறுவதாகவும், தீவிரவாதிகளின் புகலிடமாக அவை மாறிவருவதாகவும் புகார் எழுந்துள்ளது. இதனால் புதிய சிக்கலில் கேரள அரசு சிக்கியுள்ளது
 
இதனையடுத்து படகு இல்லங்களில் தீவிர சோதனை நடத்த கேரள அரசு உத்தரவிட்டுள்ளது. கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தில் இருந்து வடக்கே சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது ஆலப்புழா.
 
விசாரணைக்கு உத்தரவு  
 கேரள போலீஸ் உளவுத்துறையின் கூடுதல் இயக்குனர் ஹேமச்சந்திரன் உத்தரவின்பேரில், மாவட்ட துறைமுக அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஆலப்புழா மாவட்ட கலெக்டர் பத்மகுமார் உத்தரவிட்டுள்ளார்.
 
தீவிரவாதிகளின் புகலிடம் 
 அதுமட்டுமின்றி, பொது மக்களின் நெருங்கிய தொடர்பு இன்றி, தனியாக இருக்கும் இந்த படகு இல்லங்கள் தீவிரவாதிகளின் புகலிடமாகவும் பயன்படக்கூடும் என மாநில உளவுத்துறை கருதுகின்றது.
 
விசாரணைக்கு உத்தரவு  
கேரள போலீஸ் உளவுத்துறையின் கூடுதல் இயக்குனர் ஹேமச்சந்திரன் உத்தரவின்பேரில், மாவட்ட துறைமுக அதிகாரி மற்றும் போலீஸ் அதிகாரிகள் இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி, ஆலப்புழா மாவட்ட கலெக்டர் பத்மகுமார் உத்தரவிட்டுள்ளார்.
 
பட்ஜெட்டுக்கு ஏற்ப 
இதற்கென அந்த மாவட்டத்தில் உள்ள பாலியல் தொழில் செய்யும் பெண்களை தொடர்புப்படுத்தி வைத்திருக்கும் படகு இல்ல உரிமையாளர்கள், வாடிக்கையாளர்களின் விருப்பத்துக்கும், பட்ஜெட்டுக்கும் ஏற்ப அழகிகளை சப்ளை செய்து வருவதாக உள்ளூரில் லாட்ஜ் நடத்திவரும் சிலரும் தெரிவித்துள்ளனர்.

அழகிகள் சப்ளை 
இங்குள்ள நீர்நிலைகளின்மீது மிதக்கும் படகு வீடுகளை வாடகைக்கு எடுத்து தங்குபவர்களுக்கு விபசார அழகிகள் சப்ளை செய்யப்படுவதாக கேரள அரசின் உளவுத்துறை சமீபத்தில் கண்டுபிடித்துள்ளது.
 
சுற்றுலாப் பயணிகள் குவியல் 
 கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 60 ஆயிரம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும், சுமார் 2 லட்சத்து 60 ஆயிரம் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகளும் ஆலப்புழாவுக்கு வருகை தந்துள்ளனர்.

மிதக்கும் படகு வீடுகள்  
இயற்கை பேரெழில் கொஞ்சும் ஆலப்புழாவில் உள்ள சிற்றாறுகள் மற்றும் ஏரிகளில் வாடகைக்கு விடப்படும் படகு இல்லங்களில் தங்கியபடி, ரம்மியமான இயற்கை காட்சிகளை கண்டுகளிக்க ஏராளமான வெளிநாட்டினரும், இந்தியாவின் பிற மாநிலங்களை சேர்ந்த சுற்றுலாப் பிரியர்களும் இங்கு வருகின்றனர்.ஐஎஸ்ஐஎஸ் அமைப்பை ஒடுக்க நடவடிக்கை எடுக்காவிட்டால் ஐரோப்பா மற்றும் அமெரிக்கா தான் அந்த அமைப்பின் அடுத்த இலக்கு என்று சவுதி மன்னர் அப்துல்லா எச்சரித்துள்ளார்.

சகோதர நாடுகளின் தூதர்களுக்கான சந்திப்பின்போது சவுதி மன்னர் அப்துல்லா இதுகுறித்து கூறியதாவது, நாம் ஐஎஸ்ஐஎஸ் இயக்கத்தை புறக்கணித்தால், அவர்கள் அடுத்த மாதம் ஐரோப்பாவிற்கு குறி வைப்பார்கள்.
அதற்கு அடுத்து மாதம் அமெரிக்கா மீது இலக்கு வைப்பார்கள். தீவிரவாததிற்கு எல்லைகள் இல்லை. அவர்களின் செயல்பாடுகள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு வெளியேயும் செல்லலாம்.

உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால், ஏற்க முடியாத பின்விளைவுகளை சந்திக்க நேரலாம்.அவர்கள் எல்லாவற்றையும் செய்துவிட்டனர். இனி செய்வதற்கு ஏதும் இல்லை. இதனை அனைத்து தலைவர்களும் ஏற்று,உரிய நடவடிக்கைகளை தகுந்த சமயத்தில் எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

சீனாவில் கட்டுமான பணியில் ஈடுபட்டிருந்த நபர் ஒருவரின் கன்னத்தில் பாய்ந்த கம்பி மூளை வரை ஊடுருவி சென்றது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவை சேர்ந்த 50 வயது மதிக்கத்தக்க நபர் ஒருவர் பழைய வீடொன்றை இடிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக கட்டடத்தில் நீட்டிக் கொண்டிருந்த இரும்புக் கம்பி, அவர் காதுக்கு அருகில் கன்னப் பகுதியில் குத்தி, கண் மற்றும் மூளையை ஊடுருவிச் சென்றது.

இதனை பார்த்த சக ஊழியர்கள் உடனடியாக தீயணைப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் அளித்தனர்.

விரைந்த வந்த அதிகாரிகள், குறித்த நபரின் முகத்தில் குத்தியிருந்த இரும்புக் கம்பியை வெட்டினர்.

வலியால் துடித்த நபரை அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், உடனடியாக அறுவை சிகிச்சை செய்து கம்பியை அகற்றினாலும் அவரது ஒரு கண் மற்றும் காது கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
(ஜதுர்சயன்)
மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட வரட்சியால் பதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாவட்ட லயன்ஸ் கழகத்தினால் வரட்சி நிவாரணமாக சனிக்கிழமை (30.08.2014) அரிசியும் ஏனைய உலருணவுகளும் வழங்கி வைக்கப்பட்டன.

 கொடுவாமடு, பங்குடாவெளி, தளவாய், இலுப்படிச்சேனை, கரடியனாறு, வேப்பவெட்டுவான் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 30 குடும்பங்களுக்கு தலா 2500 ரூபாய் பெறுமதியான உலருணவுப் பொதி வழங்கப்பட்டது.

 செங்கலடி அருவி மொழிக் கழகத்தினரின் ஏற்பாட்டில் செங்கலடி ஸ்ரீ சித்தி விநாயகர் ஆலயத்தில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

 மட்டக்களப்பு மாவட்ட லயன்ஸ் கழகத்தின் தலைவர் லயன் எம். மகேந்திரராஜா, மாவட்ட லயன்ஸ் கழக ஆளுனர் லயன்; இ.டப்ளியு.ஏ.ஹரிச்சந்திரா, லயன்ஸ் மாவட்ட முன்னாள் தலைவி லேடி லால் மனுவலே, அருவி மொழிக் கழக செயலாளர் விஜயகுமார் பிறேமகுமார், உறுப்பினர் வி. சுரேஷ்குமார் உட்பட பிரமுகர்களும் கிராம மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டனர்.
ஜக்கிய தேசியக் கட்சியின் உப தலைவராக மீண்டும் சஜித் பிரேம தாச நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது

ஐக்கிய தேசியக் கட்சியின் உப தலைவர் உள்ளிட்ட சில பதவிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் வீட்டை, ஆர்ப்பாட்டக்காரர்கள் முற்றுகையிட முயன்றதால் அங்கு பெரும் பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.
இம்ரான் கானின் தலைமையில் இரண்டாயிரத்துக்கும்  மேற்பட்ட தொண்டர்கள், முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எனினும் இவர்களின் முற்றுகையை தடுக்க பொலிஸார் மேற்கொண்ட கண்ணீர் புகை குண்டுவீச்சு மற்றும் ரப்பர் குண்டு தாக்குதலில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் காயமடைந்துள்ளனர்.

பொலிஸாரின் தாக்குதலில் காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பலரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பாகிஸ்தானில் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் முறைகேடுகள் செய்து பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் வெற்றி பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் மற்றும் முஸ்லிம் மத தலைவர் தாஹிருல் காத்ரி ஆகியோர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
உடனடியாக நவாஸ் ஷெரீப் பதவி விலக வேண்டும் எனக் கோரி இவர்கள் பாரிய ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய நகரங்களில் வன்முறை வெடிப்பு
தலைநகர் இஸ்லாமாபாத்தில் இம்ரான் கான் மற்றும் தாஹிருல் காத்ரி கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் மீது பொலிஸார் தாக்குதல் நடத்திய செய்தி பரவத் தொடங்கியதும், கராச்சி, லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களை சேர்ந்த இரு கட்சி தொண்டர்கள் வன்முறையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதற்கிடையில், பிரதமரின் அதிகாரப்பூர்வ இஸ்லாமாபாத் இல்லத்தை விட்டு நவாஸ் ஷெரிப் லாகூருக்கு சென்று விட்டதாகவும், அவரது உயிருக்கு ஆபத்து இல்லை எனவும் பாகிஸ்தான் தகவல் ஒலிபரப்புத் துறை அமைச்சர் பெர்வெய்ஸ் ரஷீத் தெரிவித்துள்ளார்.


(ஜதுர்சயன்)
திருகோணமலையை பிறப்பிடமாக கொண்ட எழுத்தாளர் அனிஸ்டஸ் ஜெயராஜா (வயது 56) தான் நிகழ்த்தவுள்ள கின்னஸ் சாதனை முயற்சி ஒன்றினை சனிக்கிழமை (30.08.2014) காலை எட்டு மணிக்கு திருகோணமலை புனித சூசையப்பர் கல்லூரியின் நூலகத்தில் ஆரம்பித்தார்.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபையின் தவிசாளர் ஆரியவதி கலப்பதி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் எஸ். தண்டாயுதபாணி உள்ளிட்ட இன்னும் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.


முதல் 04 மணித்தியாலத்தில் 'எழுத்தும் எனது வாழ்வும்' எனும் தலைப்பிலும் அடுத்து வரும் 04 மணித்தியாலத்தில் 'எனது வாழ்வும் உங்கள் கரண்சியும்' எனும் தலைப்பிலும் இறுதி 04 மணித்தியாலங்கள் 'கரன்;சி இல்லாத உலகம்' எனும் தலைப்பிலும் எழுதியுள்ளார்.


இவர் தொடர்ந்து இருந்த இடத்திலே 12 மணித்தியாலங்கள் இருந்து உணவு மற்றும் நீர் ஆகாரம் ஏதுமின்றி எழுதி சாதனை புரிந்துள்ளார்.


கிழக்கு தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தினூடாக கின்னஸ் பதிவுகளுக்காக இவை அனுப்பப் பட்டுள்ளதாக எழுத்தாளர். அனிஸ்டஸ் ஜெயராஜா தெரிவித்தார்.(அஷ்ரப் ஏ. சமத்)
சட்டத்தரணி ஏ.ஜி.எச். அமீன் இதுவரை 17 சட்டத்தறை புத்தகங்களை மும்மொழிகளிலும் எழுதியுள்ளார். இன்று வெள்ளவத்தை முர் இஸ்லாமிக் கலாசார மண்டபத்தில் ஆங்கிலமொழி முலமான அல் அமீன் லோ றிபோட் நூல் இன்று வெளியீட்டு வைக்கப்பட்டது. 


இந் நிகழ்வு ஜனாதிபதி சட்டத்தரணி பாயிஸ் முஸ்தபா தலைமையில் நடைபெற்றது. நீதியமைச்சர் ரவுப் ஹக்கீம், உயர் நீதிமன்ற நீதிபதி சலீம் மர்சுப் நூலாசிரியர் ஏ.ஜி.எச்.அமீன் மற்றும் நூல்பற்றிய விமர்சனத்தை சட்டத்தரணி பசீர் அஹமட் ஆகியோறும் உரைநிகழ்தினார்கள்.
 

நூலின் முதற்பிரதியை முஸ்லீம் சலாகுதீன், மற்றைய பிரதியை புரவலர் ஹாசீம் உமர் பெற்றுக்கொண்டனர்.
 

இங்கு உரையாற்றிய சலீம் மர்சுப் - இந்த நாட்டில் உள்ள பள்ளிவசால் வக்பு சட்டத்தையும் நாம் நீதி அமைச்சின் ஊடாக மறு சீரமைக்க வேண்டும். பள்ளிவாசல் நிர்வாகம் அதன் சொத்துக்கள் சம்பந்தமாக நிறைய வழக்குகள் உள்ளன. ஒரு பள்ளிவாசலின் சொத்தில் 5 ஸ்டார் ஹோட்டல் கட்டியுள்ளார்கள். ஆகவே தான் பள்ளிவசால்களது சொத்துக்கள், நிர்வாகம் பற்றிய வக்பு சட்டத்தை புனர்நிர்மாணச் செய்வதற்கு நீதிஅமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுப் தெரிவித்தார்.
 

இங்கு உரையாற்றிய அமைச்சர் ரவுப் ஹக்கீம் - உயர் நீதிமன்ற நீதியரசர் சலீம் மர்சுப் முஸ்லீம் விவாகம் விவகரத்து காதீநிதிமன்றம் சம்பந்தமாக சமர்ப்பிக்க உள்ள சட்டத்தை பாராளுமன்றத்தில் விவதத்திற்கு விட்டு பாராளுமன்றத்தில் சமர்பித்து அனுமதி பெறப்படல் வேண்டும். அடுத்த மாதம் மட்டில் வரவுசெலவுத்திட்டம் முடிவடைந்தவுடன் அடுத்த ஆண்டே அதன் சார்த்தியமாகும் என தெரிவித்தார்.| Copyright © 2013 AlishNews